» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம்

வியாழன் 24, செப்டம்பர் 2020 8:16:27 PM (IST)தூத்துக்குடியில் வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதா திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இன்று காலை பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தூத்துக்குடி தொகுதி தலைவர் ஷேக் முகைதீன் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் உஸ்மான் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளா் மைதீன் கனி, மாவட்ட செயலாளா் அஜிஸ், எஸ்டிடியு மாவட்ட தலைவா் மைதீன், தொகுதி இனைச்செயலாளா் சேக், பாப்புலா் ஃப்ரண்ட ஆப் இந்தியா மாவட்ட செயலாளா் சம்சு மரைக்காயா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமுமுக மாவட்ட செயலாளா் அசன், தமிழா் விடியல் கட்சி மாவட்ட செயலாளா் சந்தனராஜ், மமக மாநகர செயலாளா் பிரவின், அலி அக்பா் மற்றும் எஸ்டிபிஐ கட்சி செயல் வீரா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory