» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழன் 24, செப்டம்பர் 2020 6:30:16 PM (IST)தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க மாவட்ட கிளை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் முனியசாமி போராட்டம் குறித்து விளக்கி பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் தினக்கூலி ரூ.624 வழங்க கோரிய சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை வாபஸ் பெறக்கோரி வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ நிர்வாகிகள் பேச்சிமுத்து, சங்கரன், மாரியப்பன், காசி, ஜான் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிஐடியூ மாநில செயலாளர் ரசல், சிபிஎம் புறநகர் செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory