» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது.

வியாழன் 24, செப்டம்பர் 2020 4:42:47 PM (IST)

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி இலுப்பையூரணி கண்மாய் பகுதியில் கடந்த 31.08.2020 அன்று கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரிமுத்து மகன் மந்திரமூர்த்தி(25) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் எஸ்பிக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இதுபோல் தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு, சுசி பெட்ரோல் பல்க் அருகில் கடந்த 09.09.2020 அன்று தூத்துக்குடி ஐயப்பன் நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் விஸ்வநாதன்(48) என்பவர் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதையடுத்து வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விஸ்வநாதனை கைது செய்தனர. அவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் மாவட்ட எஸ்பிக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து அவர்கள் 2பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2பேரும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes



Anbu Communications






Thoothukudi Business Directory