» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மாலை அணிவிப்பு

வியாழன் 24, செப்டம்பர் 2020 3:49:43 PM (IST)வீரபாண்டியபட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அன்னாரது 85வது பிறந்தநாளையொட்டி முழு உருவ வெண்கல சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அன்னாரது 85வது பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தமிழ்நாடு அரசால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பணிகளை துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்), ஐ.எஸ். இன்பதுரை (ராதாபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, வட்டாட்சியர் ஞானராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தோஷ், ராமராஜ், தினத்தந்தி குழும பொது மேலாளர் பொன்ராஜகுரு, ஆதித்தனார் கல்வி நிறுவன திருச்செந்தூர் மேலாளர் வெங்கட்ராமன், ஒன்றியக்குழு தலைவர்கள் செல்வி வடமலைப் பாண்டியன் (திருச்செந்தூர்), கஸ்தூரி சுப்புராஜ் (கோவில்பட்டி) ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரெஜிபார் பர்னாந்து, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சித செல்லப்பாண்டியன் தலைமையில்....இதுபோல் அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் என் சின்னத்துரை முன்னிலையில்  டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் செல்லதுரை, அமலி ராஜன், எஸ்டி கருணாநிதி, தளபதி கே பிச்சையா, பி சேவியர், ஏ முருகன், ஜோதிமணி, பிடிஆர் ராஜகோபால், ஆறுமுகநயினார், செய்யது இப்ராஹிம், செல்லா என்ற செல்லத்துரை, அரசகுரு, மாதவ சிங், ஜெய கண்ணன், உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory