» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் எஸ்பி திடீர் ஆய்வு

வியாழன் 24, செப்டம்பர் 2020 3:27:22 PM (IST)தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அகரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில், ஆற்றின் அணைகட்டும் பணி நடந்து வருகிறது. அந்த இடத்தை நேற்று மாவட்ட காவல் கண்காணப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று அங்கு ஆற்று மணல் எதுவும் அள்ளப்படுகிறதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அங்கு பணிபுரியும் நபர்கள் மற்றும் பொதுமக்களிடம் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தண்டனைக்குறிய குற்றமாகும் என்றும், அவ்வாறு மணல் அள்ளினால் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரேனும் மணல் திருட்டில் ஈடுபட்டால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை அவசர தொலை பேசி எண்.100 மற்றும் 95141 44100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள், அவர்களைப் பற்றிய விபரங்கள் சொல்லத்தேவையில்லை என்று மேலும் 95141 44100 குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் அப் தகவல் அனுப்பும் வசதியும் உள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது வல்லநாடு ஊர்த்தலைவர் சந்திராமுருகன், வழக்கறிஞர் பேச்சிமுத்து, ஊர் பொதுமக்கள் மற்றும் ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னரசு, முறப்பநாடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory