» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

வியாழன் 24, செப்டம்பர் 2020 12:26:42 PM (IST)தூத்துக்குடியில்  பா.சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், திமுக நிர்வாகிகள் ஜெகன், ஆனந்த சேகரன், முருக இசக்கி, கதிரேசன், பொன்ராஜ், அலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன், மண்டல தலைவர் செந்தூர் பாண்டியன், நிர்வாகிகள் பாரகன் அந்தோணிமுத்து, முத்துராஜன், ஜான் வெஸ்லி சம்சுதீன், ஏசுதாஸ், சுந்தர்ராஜ், சிவாரஜ் மோகன், தனுஷ், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி, சுந்தர்ராஜ், மகராஜன், அனல் செல்லதுரை ஆகியோர் மாலை அணிவித்தனர். 

பாஜக சார்பில் மாவட்ட தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் ரத்தினமுரளி, விவேகம் ரமேஷ், விஎஸ்ஆர் பிரபு, இசக்கிமுத்து, பாலமுருகன் ஆகியோர் மாலை அணிவித்தனர். 

தட்சினமாற நாடார் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஜெயக்கொடி, சீனிவாசன், தமிழ்செல்வன், சிவசுப்பிரமணியன், லிங்கசெல்வன், தங்கபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்தனர். அமமுக சார்பில் 30வது வட்ட செயலாளர் நடிகர் காசிலிங்கம், தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் சண்முக குமாரி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், ராஜலட்சுமி, பகுதி செயலாளர் இன்னாசி உள்ளிட்டோர்  பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி முன்னாள் இயக்குநர் சிஎஸ் ராஜேந்திரன், தொழிலதிபர் மரகதராஜ பாண்டியன், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், மதசார்பாற்ற மத ஜனதா தளம் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் சொக்கலிங்கம், வியாபாரிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி, வழக்கறிஞர் செங்குட்டுவன் ஆகியோர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்தனர். 

அகில இந்திய காமராஜர் மக்கள் கழகம் நிறுவனர் விஜயகுமார், அந்தோணி ஜீவா, பொன்னுசாமி, சணமுகசுந்தரம், பட்டுராஜ், அரிகிருஷ்ணன், பாரத், நாடார் சங்கம் சார்பில் சதீஷ், விஜயன், செல்வன், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் எம்எஸ் வில்சன், சூசைமுத்து, சந்திரா, செல்வன், ராமகிருஷ்ணன், சாமுவேல், பாக்கியராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை தட்சினமாற நாடார் சங்க முன்னாள் துணைத் தலைவர் எம்எஸ்ஏ பீட்டர் ஜெயபராஜ், முன்னாள் இயக்குநர் ஜெயக்கொடி, கே.ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.  

சமத்துவ மக்கள் கழகம்தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் பா.சிவந்தி ஆதித்தனார்  உருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில வர்த்தகரணி துணை செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலைக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் மாலை அணிவித்தனர். விழாவில், ஏழை மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக்குகள், ஆதரவற்ற பெண்களுக்கு இலவச அரிசி மற்றும் உதவிதொகை வழங்கப்பட்டது. மேலும், சிவத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த தனராஜ் என்பவர் 42 முறை ரத்ததானம் வழங்கிய சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

இவ்விழாவில் மாவட்ட அவைதலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண் சுரேஷ்குமார், துணை செயலாளர்கள் அருள்ராஜ், ராஜசேகரன், பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், இளைஞரணி செயலாளர் டேனியல், வழக்கறிஞரணி செயலாளர் குமாரவேல், மீனவரணி செயலாளர் சரவணன், தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம், தொழிலாளரணி செயலாளர் சதாசிவம், கலை இலைக்கிய அணி செயலாளர் முகமது, விவசாய அணி செயலாளர் சரவணன், மகளிரணி செயலாளர் குருவம்மாள், மாணவரணி செயலாளர் அகஸ்டின், மாநகர செயலாளர் உதயசூரியன் மற்றும் சிவசு முத்துக்குமார், வியாகப்பன், சகாயராஜ், பத்திரகாளிமுத்து, பொண்மணி, சுகிர்தன், சந்தனக்குமார், மதியழகன், முத்து, ரவிமுத்துக்குமரன், பாரத்,கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory