» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலி கையெழுத்திட்டு மனைவியின் பணத்தை எடுத்த ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு

வியாழன் 24, செப்டம்பர் 2020 11:35:06 AM (IST)

சாத்தான்குளம அருகே போலி கையெழுத்திட்டு மனைவியின் வங்கி கணக்கில் பணத்தை எடுத்த ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நந்தினி (28), அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் ஸ்கூட்டர் வாங்கினாராம். அதற்கான ரூ.25ஆயிரம் மானியம் அவரது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அந்த பணத்தை போலி கையெழுத்து போட்டு மனைவிக்கு தெரியாமல் சுபாஷ் எடுத்துக் கொண்டாராம். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நந்தினி புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் கணவர் சுபாஷ் மற்றும் வங்கி மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory