» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரில் வந்த வாலிபரை வெட்டிக் கொல்ல முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 24, செப்டம்பர் 2020 11:02:28 AM (IST)

தூத்துக்குடியில் முன் விரோத்தில் காரில் வந்த வாலிபரை வெட்டிக் கொல்ல முயன்ற 3பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் பெனிஸ் (25), கார் டிரைவர். இவர் சென்னையைச் சேர்ந்த மனோபா என்பவரிடம் ரூ.4ஆயிரம் கடன் வாங்கினாராம். அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெனிஸ், புதிய கார் வாங்கியுள்ளார். அந்த காரில் நேற்று போல்டன்புரத்தில் உள்ள மகளிர் விடுதி அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மனோபா, மற்றும் அவரது நண்பர்களான தூத்துக்குடி நாடார் தெருவைச் சேர்ந்த பேரின்ப கோமஸ் மகன் ஜோஸ்வா, திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ராஜேஸ் ஆகிய மூவரும் பென்னிஸ் காரை தடுத்து நிறுத்தி தகராறு செய்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். மேலும், பென்னிஸை காரில் இருந்து கீழே தள்ளி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பெனிஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes





Anbu Communications




Thoothukudi Business Directory