» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட கோரிக்கை

வியாழன் 24, செப்டம்பர் 2020 8:23:35 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும் நாடார் மகாஜன சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் ஜெயக்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்திய துணைக்கண்டத்தில் பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராக திகழ்ந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். தமிழகத்தில் பல்வேறு கோவில் திருப்பணிகளையும் செய்து உள்ளார். விளையாட்டு துறையில் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர். இலக்கியம், ஆன்மிகம், சமூகநலன் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்தமைக்காக கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. 

அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டி கவுரவித்து உள்ளது. மேலும், விளையாட்டு துறையில் சாதனை படைத்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இளம் தலைமுறையினர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அறிந்து கொள்ளும் வகையிலும், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 24-ந் தேதியை தேசிய விளையாட்டு வீரர் தினமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அதேபோன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து

ஆசீர். விSep 24, 2020 - 12:48:34 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ உ சி பெயர் வைக்கப்பட்டுள்ளதால் விமான நிலையத்துக்கு அது பொருத்தமாக இருக்காது. வாஞ்சிநாதன் பெயரில் மணியாச்சி ரயில் நிலையம் உள்ளது. அதுவும் வேண்டாம். தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு சந்திரபாபு பெயரும், விமான நிலையத்துக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரும் சூட்டலாம். தேவைப்பட்டால் மக்களிடம் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தலாம்

balaSep 24, 2020 - 12:46:09 PM | Posted IP 173.2*****

Its not acceptable.

பொய்Sep 24, 2020 - 12:21:46 PM | Posted IP 162.1*****

Why we need names? better name like Thuthukudi airport is good

ChidambaramSep 24, 2020 - 10:37:29 AM | Posted IP 173.2*****

Dear M. Sundaram, How long will you be behind VOC or Bharathi or Vanchi. Let new generation achievers get pride of their dedication. Sivanthi Aditanar may be better than Chi.Pa. Aditanar. Name Sivanthi Aditanar may be suitable.

M.sundaramSep 24, 2020 - 10:17:16 AM | Posted IP 173.2*****

We should not forget V.O.Chidambaram Pillai. VOC proceeds over Chi.Pa. Adhitthanar. Therefore, it is appropiate to name after VOC or Bharathiyar.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory