» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு அக். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அறிவிப்பு

புதன் 23, செப்டம்பர் 2020 5:46:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் 22 சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் அக்.3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 22 அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு 03.10.2020 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அமைப்பாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தியடைந்தும் குறிப்பிட்ட தேதியில் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

காலியாகவுள்ள பணியிடங்கள் அரசாணையின் படி நிரப்பப்படும் கல்வித் தகுதி இருப்பிடம், சாதி, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட தூரச்சான்று, விதவை / கணவரால் கைவிடப்பட்டோர் இதர முன்னுரிமை ஆகியவற்றுக்கான ஆதாரச்சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். நியமன பணியிடத்திற்கும் விண்ண்பதாரர் குடியிருக்கும் இடத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். (நகராட்சி / குக்கிராமம் / வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது). 

காலியிடமுள்ள பள்ளி, பள்ளிகளுக்கான இனசுழற்சி விவரம் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருக்கும். விண்ணப்பநகல் சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இலவசமாக வழங்கப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு 03.10.2020 முடிய அலுவலக வேலை நாட்களில் அனுப்பப்பட வேண்டும். 03.10.2020 மாலை 5.45-க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வயது வரம்பு 31.08.2020ம் தேதியினை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களை தொடர்பு கொள்ளவும். விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்கு பின் தகுதி வாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். அழைப்பாணையில் தெரிவிக்கப்படும் தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நேர்முக தேர்வுக்கு மனுதாரர் அசல் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory