» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை: எஸ்பி அறிவிப்பு

புதன் 23, செப்டம்பர் 2020 5:28:05 PM (IST)

வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது என எஸ்பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஊர்வலத்திற்கோ, ரத ஊர்வலத்திற்கோ மற்றும் எவ்வித ஊர்வலத்திற்கோ அனுமதி கிடையாது. 

மேலும் பால்குடம் எடுத்து செல்வதற்கோ, அன்னதானத்திற்கோ எவ்வித அனுமதியும் இல்லை. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நடந்திட வேண்டும். ஜாதி ரீதியாக சட்டை அணியவோ, பிற ஜாதியினரை புண்படும்படி வாசகங்களை பயன்படுத்தி கோஷம் எழுப்பக்கூடாது. நீதிமன்ற உத்தரவு பிரகாரம் டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க அனுமதியில்லை. மேலும் வெங்கடேஷ் பண்ணையார் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory