» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்: சுபாஷ் மீது எஸ்பியிடம் பரபரப்பு புகார்

புதன் 23, செப்டம்பர் 2020 5:01:58 PM (IST)

சுபாஷ் பண்ணையாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பிக்கு அனுப்பியுள்ள மனு: நான் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2001 முதல் தற்போது வரை இருந்து வருகிறேன். மேலும் தி.மு.க தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறேன். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், அருகில் உள்ள சொக்கன்குடியிருப்பு ஊரைச் சார்ந்த செல்வன் என்பவர் படுகொலை செய்யப்பட்டு எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட செல்வன் குடும்பத்தாருக்கு நியாயமும், நிவாரணம் கிடைக்க எனது தலைமையிலும், திராவிட முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பிலும் 20.09.2020 அன்று இரவு 10 மணியில் இருந்து போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் 21.09.2020 அன்று நன்பகல் 1 மணிக்கு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து என்னிடமும் பாதிக்கப்பட்ட செல்வன் குடும்பத்தாரிடமும் உரிய நிவாரணமும், உரிய சட்ட நடவடிக்கையையும் விரைவாக எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போராட்டம் விளைக்கிக் கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் நான் 21.09.2020 அன்று சொக்கன்குடியிருப்பில் செல்வன் படுகொலையை கண்டித்து போராட்டத்தில் இருந்தபோது எனது தண்டுபத்து வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த எனது காரை (TN69 BK6617 - BOLLERO) பனங்காட்டு மக்கள் கழகம், மாவட்டச் செயலாளர் ஓடை செல்வம் தலைமையில் ஜீன்னா , ஜான், சண்முகநாதன் ஆகியோர்கள் அடித்து உடைத்துள்ளார்கள். அதன் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் குற்ற எண் : 146/2020, U/S 294 (b), 427, 506 (2), 109 வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் 23.09.2020 அன்று காலை You Tube மற்றும் சமூக வளைதளங்களில் ஆறுமுகநேரி, மூலக்கரையைச் சார்ந்த அசுபதி மகன் சுபாஷ் என்பவர் என்னை மிரட்டும் வகையில் பேசியதை கேட்டேன். மேலும் அதில் 21.09.2020 அன்று எனது வீட்டின் முன்பு எனது காரை உடைத்த சம்பவத்தில் எனது கட்சி நிர்வாகிகள்தான் காரை உடைத்தது உண்மைதான் என்றும் சுபாஷ் பேசியுள்ளார். மேலும் என் மீது வழக்கு கொடுக்க வேண்டியதுதானே, என்மீது வழக்கு கொடுத்துப் பார்க்கட்டும் என்றும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். 

மேலும் உன் அழிவு ஆரம்பம் ஆகிவிட்டது என்றும் திருந்து அல்லது திருத்தப்படுவாய் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேற்படி சுபாஷ் அவர்கள் மீது பல கொலை வழக்குகள் இருந்து வருவதாலும் மேற்படி நபரின் இத்தகைய செயலால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசிய சுபாஷ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய குற்ற எண் : 146/2020 வழக்கிலும் சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனது உயிருக்கும், உடமைக்கும் சட்டப்படியான பாதுகாப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory