» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காராபேட்டை மகமை சங்கத்தில் மோசடி : தலைவர் மீது வழக்குப் பதிவு

புதன் 23, செப்டம்பர் 2020 12:31:57 PM (IST)

தூத்துக்குடியில் காராபேட்டை நாடார் மகமை சங்கத்தில் அதிகாரங்களை மீறி மோசடியில் ஈடுபட்டதாக சங்கத்தின் தலைவர் உட்பட 2பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடதிசை இந்து நாடார்கள் தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கத்தின்  தலைவராக எஸ்கேஎஸ் நடராஜன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது அதிகாரத்தை மீறி சங்கத்தின் முத்திரையோடு தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரிக்கு உறுப்பினர்கள் பட்டியலை தயார் செய்து கொடுத்தாராம். இதற்கு பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். 

இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் விநாயகமூர்த்தி, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில், சங்கத்தின் தலைவர் நடராஜன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் மீது இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்வம்  காராபேட்டை நாடார் மகமை சங்க நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory