» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா விற்பனை: அதிமுக பிரமுகர் உட்பட 3பேர் கைது

செவ்வாய் 22, செப்டம்பர் 2020 4:38:29 PM (IST)தூத்துக்குடியில்  2.200 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பிரமுகர் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டவுண் டிஎஸ்பி கணேஷ் ஆலோசனையின் பேரில் வடபாகம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் சிவன்கோயில் தேரடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி நடராஜபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி (40), பங்களா தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் இசக்கிமுத்து (39), சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமண நாராயணன் மகன் முரளி (40) என்பதும் கஞ்சா விற்பனையில ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தியதாக ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் முரளி அதிமுக வட்டச் செயலாளராக உள்ளார். மேலும் தேரடி பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார் என்று தெரியவந்துள்ளது. மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 23, 2020 - 10:04:11 AM | Posted IP 173.2*****

இதுதான் அதிமுகவின் டெல்லி தலைவர் மோடி சொன்ன சுயசார்பு தொழில். ஒரு தொழிலதிபரை கைது பண்ணிடீங்களே சார்

M.sundaramSep 22, 2020 - 07:37:04 PM | Posted IP 108.1*****

See the auto . It contains the poster of AIADMK. How long they cheat us ? This is MGR's song.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory