» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அபாயகரமான கட்டிடங்கள் குறித்து வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 22, செப்டம்பர் 2020 8:56:33 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், அரசுகட்டிடங்கள் குறித்த விபரத்தினை வாட்ஸ் அப் மூலம்  தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. மழை கால விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் பகுதியில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள், வீடுகள், அங்கன்வாடிகள், பள்ளி சத்துணவுக்கூட கட்டிடங்கள், நியாய விலைக் கடைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதரவை குறித்த விபரத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 24 மணிநேரமும் இயங்கி வரும் அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் எண்: 8680800900 மற்றும் தொலைபேசி எண் 0461 2340101 மூலம் உடனடியாக தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஆசீர். விSep 22, 2020 - 04:38:57 PM | Posted IP 108.1*****

மொதல்ல ஊரு முழுக்க சாக்கடையை கட்டுறேன்னு மாநகராட்சி சோலி முடிச்சு வச்சிருக்கிற சாலையை சரி பண்ணுங்க சார். ஊரு முழுக்க ஒரு சாலை நல்ல சாலை இல்ல. ஊரை சுத்தி பூங்கா கட்டுறதுக்கு இதை சரி பண்ணுங்க சார். பூங்காவை வச்சு அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது.

kumarSep 22, 2020 - 12:03:28 PM | Posted IP 173.2*****

parliament. legisletive assemply than rompa apayakarama idam

மக்கள்Sep 22, 2020 - 10:47:19 AM | Posted IP 162.1*****

ரோடே மோசமா இருக்கே, அதுவும் சாலை பாதுகாப்பு தானே , அதை கண்டுக்காம இருக்காங்களே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory