» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழில் போட்டியில் வாலிபர் வெட்டிக் கொலை : தூத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 22, செப்டம்பர் 2020 8:21:30 AM (IST)

தூத்துக்குடியில் தொழில் போட்டியில் வாலிபரை சக ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சில்வர்புரத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன் மகன் நந்தகுமார் (42), வேதமுத்து மகன் ஜார்ஜ் (45). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பர்னிச்சர் கம்பெனிக்கு ஒப்பந்த முறையில் உதிரி பாகங்கள் தயாரித்து கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஜார்ஜ் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நந்தகுமாருக்கு பர்னிச்சர் கம்பெனி நிர்வாகத்தினர் ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். இதனால் நந்தகோபால் மீது ஜார்ஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் பைக்கில் வந்து கொண்டிருந்த நந்தகுமாரை, ஜார்ஜ் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரை தாக்கியுள்ளார். பின்னர் அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து ஜார்ஜை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், ரூரல் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட நந்தகுமாருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


மக்கள் கருத்து

jeya kumarSep 22, 2020 - 10:58:18 AM | Posted IP 162.1*****

sandai podunga. ungal nilaiyai sollunga. kolai pannaatheenga. pavam kudumbam. rendu ponnunga manaivi enna pannuvanga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory