» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனாவில் இருந்து மீண்ட காவல் துறையினர் 30பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

புதன் 16, செப்டம்பர் 2020 3:24:32 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய காவல் துறையினர் 30 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனிதா, குளத்தூர் உதவி ஆய்வாளர் தேவராஜ், ஆழ்வார்திருநகரி சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் பாலசுப்ரமணியன், சாத்தான்குளம் தலைமைக் காவலர் ஐசக் மகாராஜா, புதியம்புத்தூர் தலைமைக் காவலர் பாபு, புதுக்கோட்டை தலைமை காவலர் ஜெயராணி, உள்ளிட்ட 30பேர் களப் பணியாற்றும் போது கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேற்படி 30 காவல்துறையினருக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி ‘கரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள். அப்பணியில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதனின்று மீண்டு வந்துள்ளீர்கள். சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது” என்று வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory