» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்குவரத்து பிரிவு தொழிலாளர்களுக்கு கொரோனா சத்துமாத்திரை : மாநகராட்சி வழங்கியது

புதன் 16, செப்டம்பர் 2020 1:34:17 PM (IST)தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் போக்குவரத்து பிரிவு தொழிலாளர்களுக்கு கொரோனா சத்துமாத்திரை வழங்கப்பட்டது.
       
தமிழக அரசு கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. அது போல் குழந்தைகளின் குடற்புழுநீக்க அல்பென்ட் சோல் மாத்திரிரை வழங்கிவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப நகர சுகாதார நிலையங்கள் மூலம் 4 லட்சத்து 36 ஆயிரத்து 635 பேருக்கு குடல் புழுநீக்கும் அல்பென்ட் சோல் மாத்திரை 1 வயது முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

கொரோனா சத்து மாத்திரை, குடல் புழுநீக்கம் அல்பென்ட் சோல் மாத்திரைகளை தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் சுகாதார பணியாளர்கள் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கல்வி குமார் முன்னிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஒய்வூதிய சங்க தலைவர் மாடசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் பொன்னம்பலம், போக்குவரத்து தொழிலாளர்கள் தொப்பை கணபதி, பாலசுப்பிரமணியன், திருமணி, லிங்கபாண்டி, பார்த்தீபன் முத்துக்குமார், மாரியப்பன் உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்,


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory