» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வரும் 22 ஆம்தேதி புதியம்புத்தூரில் உண்ணாவிரத கடையடைப்பு போராட்டம்

புதன் 16, செப்டம்பர் 2020 1:20:12 PM (IST)தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வரும் 22ஆம் தேதி புதியம்புத்தூரில் உண்ணாவிரத கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

ஓட்டப்பிடாரம் மலர் குளத்துக்கு வரும் நீர் ஓடையை ஆக்கிரமிப்பை அகற்றி, செட்டியூரணி ஓடையை சரி செய்து தராமல் இழுத்தடிப்பு செய்து வரும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, புதியம்பத்தூர் வட்டார பொதுமக்கள் சார்பில் அடையாள உண்ணாவிரத மற்றும் கடையடைப்பு அறப்போராட்டம் வரும் 22ஆம் தேதி புதியம்புத்தூர் பஸ்நிலையம் அருகே நடைபெறுகிறது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜம்புலிங்கபுரம், புதியம்புத்தூர், S.கைலாசபுரம், குலசேகரநல்லூர், ஓட்டப்பிடாரம், இராஜாவின்கோயில், சாமிநத்தம், சில்லாநத்தம் மற்றும் தெற்கு வீராபாண்டியபுரம் ஆகிய ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சிமன்றங்களுக்கு உட்பட்ட விவசாய சங்கங்கள் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள், புதியம்புத்தூர் வட்டார ரெடிமேட் வியாபாரிகள் சங்கங்கள், புதியம்புத்தூர் மலர் குளம் நீர் பாசன விவசாய சங்கங்கள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.


மக்கள் கருத்து

செல்வின்Sep 17, 2020 - 08:56:10 PM | Posted IP 108.1*****

வண்டிபாதை இது நீர்வரத்து ஓடை அல்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest Cakes


Thoothukudi Business Directory