» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக ஓசோன் தினம்: புதுமணத் தம்பதியர் பங்கேற்பு

புதன் 16, செப்டம்பர் 2020 12:22:26 PM (IST)கோவில்பட்டியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு காற்று மாசுபடுதலை தடுக்க வலியுறுத்தி மணக்கோலத்தில் புதுமணத் தம்பதியர் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

பூமியை கவசமாக இருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய க்ளோரா புளோரா கார்பன் பயன்பாட்டை குறைத்து கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987ல் உருவானது இதனை நினைவு கூறும் வகையில் ஐ.நா.சபை செப்டம்பர் 16ம் தேதியை உலக ஓசோன் தினமாக அறிவிக்கப்பட்டு 1995ம் ஆண்டு முதல்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை சார்பில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி  புதுக் கிராமம் இலுப்பையூரணி பிரதான சாலை மற்றும் சிந்தாமணி நகர் தெருக்களில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று காலை நடந்தது. 

தேசிய பசுமைப் படை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் இன்று திருமணமான  மாரிமுத்துப் பாண்டியன், நந்தினி தம்பதியினர் மரக்கன்றுகளை நட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இணைய வழி மூலம் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி நடைபெற்றது. விழாவில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் செண்பக சபரி பெருமாள், சிந்தாமணி நகர் வளர்ச்சிக் குழு தலைவர் பால்ராஜ், சுற்றுச்சூழல் விருதாளர் முத்து முருகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆசியா பார்ம்ஸ் பாபு, ரவி மாணிக்கம், பணி நிறைவு பெற்ற நூலக ஆய்வாளர் பூல் பாண்டியன், சிந்தாமணி நகர் வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் முருகன், முத்துப்பாண்டி, தேசிய பசுமைப் படை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன், செயக்குமார், கால்நடை துறை குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory