» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வரதட்சனை கொடுமை: டாக்டர் உட்பட 3பேர் மீது வழக்கு

புதன் 16, செப்டம்பர் 2020 11:46:56 AM (IST)

தூத்துக்குடியில் கூடுதல் வரதட்சனை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி, எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சரவணகுமார் (36) ஹோமியோபதி டாக்டர். இவருக்கும் தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் மகள் தங்கஜோதி (32) என்பவருக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது 20 பவுன் நகையும், ரூ.2லட்சம் ரொக்கமும் பெண் வீட்டார் வரதட்சனையாக கொடுத்துள்ளனர். இந்த தம்பதியருக்கு குழந்தையில்லை. இதனால் மேலும் 10 பவுன் நகை கேட்டு சரவணகுமார், மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கஜோதியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டில் கணவரை பிரிந்த தங்கஜோதி, திருமணத்தின் போது கொடுத்த வரதட்சனை மற்றும் கணவர் வீட்டிலிருந்த தனது படிப்புச் சான்றிதழ்களை திருப்பிகேட்டுள்ளார். ஆனால் கணவர் குடும்பத்தினர் அதனை தரமறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து தங்கஜோதி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சரவணக்குமார், அவரது அப்பா பெரியசாமி, அம்மா ஜெயலட்சுமி, அக்கா வசந்தி ஆகிய 3பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes


Anbu Communications




Thoothukudi Business Directory