» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பெண்கள் மாயம் : போலீஸ் விசாரணை

புதன் 16, செப்டம்பர் 2020 11:37:42 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி குமாரரெட்டியார்புரம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் பொன்மலர் (20), கடந்த 13ம் தேதி கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதையடுத்து அவரது தந்தை தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கணவருடன் கோபித்துச் சென்ற மனைவி

கோவில்பட்டி நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி செண்பகவல்லி (30). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. குழந்தையில்லை இதனால் தம்பதியர் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவருடன் கோபித்துக் கொண்டு செண்பகவல்லி கடந்த 13ம் தேதி வீட்டை விட்டுச் சென்று விட்டார். இதையடுத்து அவரது கணவர் ஜெயக்குமார், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory