» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடுப்புச்சுவரில் லாரி மாேதி விபத்து : டிரைவர் பலி ‍- தூத்துக்குடி அருகே பரிதாபம்!

புதன் 16, செப்டம்பர் 2020 10:54:01 AM (IST)

தூத்துக்குடி அருகே தடுப்புச்சுவரில் லாரி மாேதி விபத்திற்குள்ளானதில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கள் பள்ளிப்பட்டி கிராமம் முருகன் காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் மகன் பாண்டியராஜன் (வயது 45). லாரி டிரைவான இவர் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு லாரியில் சரக்குகளை ஏற்றி ஓட்டிவந்தார். எப்போதும்வென்றான் அருகே வரும் போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில், லாரி டிரைவர் பாண்டியராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory