» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கொள்ளையில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது

புதன் 16, செப்டம்பர் 2020 8:20:25 AM (IST)

தூத்துக்குடியில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முத்துகிருஷ்ணாபுரம் கல்லறைத்தோட்டம் அருகே கையில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த எலியாஸ் மகன் பிரஜின் (27), முருகேசன் மகன் அருண்குமார் (27), தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த முத்தையா மகன் அந்தோணி கிங்ஸ்டன் (25), திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செய்யது இப்ராகிம் மகன் இஸ்மாயில் (23), தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கற்குவேல் மகன் அருண்குமார் (19) என்பது தெரியவந்தது. இவர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட தயாராக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார்.


மக்கள் கருத்து

KANNANSep 17, 2020 - 07:23:07 AM | Posted IP 162.1*****

Good sir Keep it up

RamanathanSep 16, 2020 - 03:41:01 PM | Posted IP 162.1*****

Shortly we expect crimeless TUTICORIN

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory