» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 12:45:04 PM (IST)தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்எப்ஐ சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய தமிழக அரசைக் கண்டித்தும், எஸ்எப்ஐ சார்பில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மாரி, மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட மாணவர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், போராடிய இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினரை ஏவிவிட்டு தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


மக்கள் கருத்து

kumarSep 16, 2020 - 01:00:34 PM | Posted IP 162.1*****

poi olunga padikira velaya parunga thambigala....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory