» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது : 3 பேருக்கு வலைவீச்சு

திங்கள் 14, செப்டம்பர் 2020 7:34:30 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில்  3 பேரை போலீசார் கைது செய்ததுடன், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் கபில்தேவ் (27). முத்தையாபுரம், சுந்தர் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் சாம்சன் (23) இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இரவு தூத்துக்குடி பஜாரில் உள்ள ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சாம்சனின் நண்பர் தாளமுத்து நகரைச் சேர்ந்த ராஜவேல் என்கிற இஸ்ரவேல் (19) என்பருக்கும் கபில்தேவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது கடையில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு சாம்சனுக்கு போன் செய்து, கபில்தேவை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வரவழைத்துள்ளனர். அப்போது கபில்தேவை, ராஜவேல் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. இதில் சாம்சன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜவேல் உட்பட 6 பேர் கும்பலை தேடி வந்தனர். 

இந்நிலையில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் இக்காெலை வழக்கு தொடர்பாக தாளமுத்து நகர் கோவில்பிள்ளைவிளையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜவேல் என்ற இஸ்ரவேல் (வயது 29), பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த செந்தில்குமரன் மகன் அலெக்ஸ் என்ற விஜய பிரகாஷ் (வயது 28), மேல அலங்காரதட்டைச் சேர்ந்த நாகராஜன் மகன் ஷாம் என்ற டேனியல்ராஜ் (வயது 22), ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes



Thoothukudi Business Directory