» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனாவுக்கு ஆள்பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் : ஆட்சியரிடம் சமக நிர்வாகிகள் புகார்!!

திங்கள் 14, செப்டம்பர் 2020 5:41:44 PM (IST)கரோனா பெயரால் பொது மக்களை அச்சுறுத்தும் மாநகராட்சி தற்காலிக பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு : உலகத்தையே அச்சுறுத்தி வந்த கரோனா என்ற வைரஸ் தொற்றிலிருந்து கடந்த ஐந்து மாதங்களாக பொது மக்களும் அன்றாடம் பிழைப்பு நடத்தும் தொழிலாளர்களும் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். 

இந்த தருணத்தில் கரோனாவுக்கு ஆள்பிடிக்கும் தவறான நோக்கத்தில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் ஆங்காங்கே நின்று கொண்டு ரோட்டில் செல்லும் பொதுமக்களையும் தினசரி அன்றாட வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களையும், வியாபாரிகளையும் வழிமறித்து தடுத்தி நிறுத்தி கண்டிப்பாக கரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பலாத்காரமாக டெஸ்ட் எடுத்து பொதுமக்களிடம் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி ஒரு அசாதாரண சூழலை உருவாக்குகிறார்கள். 

ஏற்கனவே மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு இடத்திலும் முகாமிட்டு வீடு வீடாக கரோனா டெஸ்ட் எடுத்து முடித்துவிட்டார்கள். தற்பொழுது மாநகராட்சி தற்காலிக ஊழியர்களை நியமித்து பொதுமக்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகிறார்கள். சகஜ நிலைக்கு திரும்பி வரும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குழப்பமான சூழ்நிலையினை உருவாக்கி வருகிறார்கள். ஆகவே தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்படி செயலினை தடுத்து நிறுத்துமாறு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory