» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை நுழைவு வாயிலை மூடக் கூடாது : மீனவர்கள் கோரிக்கை!!

திங்கள் 14, செப்டம்பர் 2020 4:17:39 PM (IST)

தூத்துக்குடி துறைமுகம் விருந்தினர் மாளிகை அருகேயுள்ள கடற்கரை நுழைவு வாயிலை மூட கூடாது என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி ஹார்பர் மீனவர் காலனி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: நாங்கள் துறைமுகம் சுனாமி காலனியில் 1964ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகம் தொடங்கப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே 4 தலைமுறைகளாக குடியிருந்து வந்தோம். சுனாமி ஏற்பட்ட பின்னர் நாங்கள் தற்போது குடியிருந்து வரும் சுனாமி காலனிக்கு மாற்றப்பட்டோம். கடந்த பல ஆண்டுகளாக அமைதியான முறையில் துறைமுகம் விருந்தினர் மாளிகைக்கு பின்புற பகுதியில் கரைவழி மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். 

இந்த கடற்கரை பகுதியின் நுழைவு வாயிலை மீன் வாகன போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த நுழைவு வாயிலை மூடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நுழைவு வாயில் அடைக்கப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். துறைமுக அதிகாரிகள் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. கடற்கரை பகுதி சுத்தமாகவும், அழகாகவும் இருப்பதற்கு நாங்களே காரணம். எனவே மாவட்ட ஆட்சியர் கடற்கரை நுழைவு வாயிலை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory