» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

புதன் 19, ஆகஸ்ட் 2020 2:02:27 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதன்படி, ஆலையைத் திறக்கக்கோரி தொடர்ந்த மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

இந்த தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அந்த ஆலையால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ளும் மக்களிடையே இந்த தீர்ப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் சட்ட ரீதியான போராட்டத்தை தொடருவோம் என்றும் ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ தெரிவித்தார்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மேல்முறையீடு செய்தால் தங்களது கருத்தை கேட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory