» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குண்டு வீச்சில் பலியான காவலர் குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் நிதி உதவி : முதல்வர் அறிவிப்பு!

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2020 6:29:12 PM (IST)

வல்லநாடு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பலியான போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இன்று கொலை வழக்கில் தொடர்புடையவரை பிடிக்க முயன்றபோது ரவுடி வீசிய வெடிகுண்டில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய தலைமைக் காவலர் சுப்பிரமணியன் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன், பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெரியசாமி. சுப்பிரமணியன், கடந்த 2017-ல் காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். சமீபத்தில் தனிப்படை பிரிவில் பணிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 6 மாத ஆண்குழந்தை உள்ளது. 

இதையடுத்து கொலையுண்ட காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், ரூ.50 லட்சம் நிதியுதவியையும் அறிவித்தார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory