» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரண்டாம் இடத்திற்குத்தான் திமுக - பாஜக இடையே போட்டி : அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 3:55:19 PM (IST)

பாஜகவுக்கு எதிர்க்கட்சி ஆசை வந்திருக்கிறது. தமிழகத்தில் 2வது இடத்திற்கு திமுக - பாஜக இடையே போட்டி நடப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். 
 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சர் கடம்பூர் செ ராஜு தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "2வது இடத்திற்கு வருவதற்கு தான் திமுக - பாஜக இடையே போட்டி என்று வி‌‌.பி. துரைசாமி கூறி இருக்கலாம், கடந்த 2011ல் எங்கள் அணியில் இணைந்து தேமுதிக எதிர்கட்சியானது,  நண்பர் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவரனார். 

அதைப் போன்று தற்போது எங்கள் அணியில் பா.ஜ.கவிற்கு எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. அதற்காக மறைமுகமாகத் தெரிவித்து இருக்கலாம். திமுக பாஜக இடையே 2வது இடத்திற்கு தான் போட்டி என்பது திமுகவில் இருந்த வி.பி.துரைசாமி மறைமுகமாக தெரிவித்துள்ளார், திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவர்கள் என்று மு.க. அழகிரி தெரிவித்து வருகிறார். திமுகவில் நடப்பது குடும்ப அரசியல், ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு திமுக குடும்ப அரசியலை முன்னிறுத்தி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 

மு.க.ஸ்டாலின் கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை,‌கனிமொழி மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆகையால்தான் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் முன்னிலை நிறுத்தி வருகிறார். இதனால் வி.பி.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் போன்றோர் திமுகவில் இருந்து வெளியேறி பாஜக சென்றுள்ளனர். திமுகவில் இருந்து நீக்கி பார்க்கட்டும் என்று கு.க.செல்வம் சாவல் விட்டுள்ளார். திமுகவில் மனக்குமுறல் உள்ளது என்பது எங்களைவிட  மு.க.அழகிரிக்கு தான்  நன்றாக தெரியும், எனவே அவர் கூறிய கருத்து திமுகவில் பிரதிபலிக்கும் சூழ்நிலை உள்ளது என்றார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory