» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு பணியில் 2ஆயிரம் போலீசார்: வாகன சோதனை தீவிரம்

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 3:07:19 PM (IST)74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்; தலைமையில் மாவட்டம் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் வருகிற 15ம் தேதி 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல முக்கிய அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிறவர்களின் வாகனங்கள் நுழை வாயிலில் சோதனையிட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களையும், அவர்களது வாகனங்களையும், போலீசார் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இப்பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் கோபி ஆகியோர் உடனிருந்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 96 முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரோந்துப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 18 நெடுஞ்சாலை காவல் ரோந்தும், இது தவிர காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 38 சிறப்பு ரோந்துப்படையும் அமைக்கப்பட்டு அவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதிகளில் 18 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறவுள்ள தூத்துக்குடி தருவை மைதானத்திற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory