» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் : அமைச்சர் கடம்பூர் ராஜூ

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 2:03:04 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் கிடைக்க உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் தெற்கு வண்டானம் ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தெற்கு வண்டானம் ஊராட்சியில் கலிங்கப்பட்டி (எ) குமரபுரம் மற்றும் தெற்கு வண்டானம் பகுதியில் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளியிடம் கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.

பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் சென்னை மட்டுமல்லாமல் கோவை, சேலம், திருச்சி, திண்டுக்கல் மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று கரோனா  தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார். மேலும் காணொலி காட்சி மூலமாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை கலந்தாலோசித்து உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். மாவட்ட நிர்வாகம் சோதனை சாவடிகளை அமைத்து, இ பாஸ்களை வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழக அரசு ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலமாக கொரோனா எவரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முககவசங்களை வழங்கியுள்ளது. மகளில் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பெரும்பாலான பொதுமக்களுக்கும் முககவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர்  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கவசங்கள் வழங்குவதற்கு உத்தரவிட்டு அதற்கான பணிகளை துவங்கி வைத்துள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசங்கள் வழங்கும் பணிகளை கோவில்பட்டி வ.உ.சி.நகர் நியாய விலைக்கடையில் துவங்கி வைக்கப்பட உள்ளது.  

கரோனா தடுப்பு பணிகளுக்கு இடையிலும் நாள்தோறும் அனைத்து பகுதிகளிலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தெற்குவண்டானம், குமராபுரம், கலிங்கப்பட்டி பொதுமக்கள் குடிநீர் விலைக்கு வாங்கும் நிலை இருப்பதாகவும், எனவே சீவலப்பேரி குடிநீர் திட்டத்தின் மூலம் எங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கை 4 நாட்களில் நிறைவேற்றப்பட்டு இன்று தெற்கு வண்டானம், குமராபுரம் கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே நமது மாவட்டத்தில் ரூ.106 கோடி மதிப்பீட்டில் 240 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும்; திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டவுடன் கயத்தாறு, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 240 குடியிருப்பு பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். கோவில்பட்டிக்கு 2வது பைப்லைன் திட்டம், 4வது பைப்லைன் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலமாக குடிநீர் தேவையான அளவு கிடைக்கிறது. நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் கிடைக்க உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.  

நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், உதவி பொறியாளர் மெர்சி, கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஊராட்சி தலைவர் கனகராஜ்பாண்டியன், முக்கிய பிரமுகர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, வர்கீஸ், ராமசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory