» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறையினர் - வியாபாரிகள் நல்லிணக்க கூட்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்பி தலைமையில் நடந்தது

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 12:23:46 PM (IST)ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை காவல்துறையினர் -அனைத்து வியாபரிகள் சங்க நல்லிணக்க கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வியாரிகள் சங்கம் சார்பில் தலைவர் காளியப்பன் மற்றும் சங்க உறுப்பினர்களும், ஸ்ரீவைகுண்டம் மக்கள் நல இயக்கம் சார்பில் துணைத் தலைவர் சந்துரு மற்றும் அதன் உறுப்பினர்களும், ஸ்ரீவைகுண்டம் லயன் கிளப் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசும்போது "காவல்துறையினர்-வியாபாரிகளுக்கிடையே எப்பொழுதும் ஒரு இனக்கமான நட்புறவு இருக்க வேண்டும். பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வாக முகக் கவசம் அணிய வேண்டும். அதனால் 90% வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் மற்றும் சத்தான உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்" என்று எடுத்துரைத்தார்.

பின்னர் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி போன்றவற்றை வழங்கினார். அதன்பின்னர் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலூகா அலுவலக சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கினார். இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் ஜீன்குமார், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory