» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உட்பட 2பேர் பலி

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 12:04:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உட்பட 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி, கே.வி.கே., சாமி நகரைச் சேர்ந்தவர் மதன். இவரது மகன்  மோனீஸ் (13), தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டில் சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

மற்றொரு சம்பவம் 

மதுரை, செல்லூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் காளிராஜன் (21), பிளம்பர். இவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம், பிளாத்திகுளம் மெயின் ரோட்டில் அழகர் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் பிளம்பிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications


Black Forest Cakes





Thoothukudi Business Directory