» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

27 சதவீத இடஒதுக்கீடு கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 11:53:21 AM (IST)

 

தூத்துக்குடியில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் எதிரில் அதன் நிறுவன தலைவர் இசக்கி ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் 2021ஆம் ஆண்டு ஓபிசி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய அரசு சார்ந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட்ட 27 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளில் அந்தந்த மாநிலங்களில் இடஒதுக்கீடு கோட்பாடினை உடனடியாக அமல்படுத்த வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர தலைவர் அங்குசாமி, செயலாளர் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் நாகராஜ், செயலாளர் கருப்பசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திக், முத்தையாபுரம் பகுதி செயலாளர் நாகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory