» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தண்ணீர் லாரி மோதி விபத்து: போலீஸ்காரர் உயிரிழப்பு - தூத்துக்குடி அருகே பரிதாபம்!!

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 11:52:48 AM (IST)

தூத்துக்குடி அருகே சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியதில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகேயுள்ள, முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் செந்தில் வேலாயுதம் (79). காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று புதுக்கோட்டை சர்வீஸ் ரேட்டில் சைக்கிளில சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் வழக்குப்பதிந்து, லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மணி மகன் கண்ணன் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications







Thoothukudi Business Directory