» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக யானைகள் தினம் : மாணவர்கள் உறுதியேற்பு

புதன் 12, ஆகஸ்ட் 2020 3:10:01 PM (IST)கோவில்பட்டியில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யானை முகமூடி அணிந்து யானைகளை பாதுகாக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 ம் தேதி யானைகளை பாதுகாக்க உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றம், கடும் வறட்சி, பருவ மழை தவறுதல், போன்ற காரணங்களால் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையோர குடியிருப்புகளை நோக்கி கூட்டமாக வருகின்றன. வன விதிகளை மீறும் கும்பலால் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, குவாரிகளில் கல் தோண்டுதல், வசிப்பிடங்களில் மக்கள் நடமாட்டம் போன்ற காரணங்களால் வனங்களை விட்டு யானைகள் வெளியேறுகின்றன. 

அவ்வாறு வெளியில் வரும் பொழுது குழிகளில் தவறுதல் ரயில்வே தண்டவாளங்களை கடப்பது, மின் வேலியில் சிக்குவது போன்ற காரணங்களால் இறக்கின்றன. 2015 ஆண்டின் ஆய்வின் படி இந்தியாவில் 32 ஆயிரம் யானைகளும், தமிழகத்தில் 3750 யானைகளும் இருந்ததாக தகவல் உள்ளது. உலக அளவில் 22 வகையான பாளைகள் அழிந்நுள்ளன வனங்களில் பழ மரக்கன்று நடுதல், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தல் போன்றவற்றின் மூலம் யானைகளை நாம் பாதுகாக்கலாம். 

கோவில்பட்டி சிந்தாமணி நகரில் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது இல்லங்களின் முன்பு யானை முக கவசம் அணிந்து யானை இனங்களை பாதுகாக்கவும், யானைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும், வீட்டிலிருந்து வெளியில் செல்லும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் முத்து முருகன், தினேஷ் குமார், முருகன், முத்துகணேஷ், சிவபெருமார் உள்பட பலர் முக கவசம் அணிந்தும். சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கெண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory