» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண நிகழ்ச்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்கள் : விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!

புதன் 12, ஆகஸ்ட் 2020 11:49:48 AM (IST)

தொழில் நிறுவனங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பொதுப் போக்குவரத்துகள் முடங்கியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் ஐகோர்ட்டு உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு வர ஏதுவாக, தேவைக்கேற்ப பஸ்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. பொது ஊரடங்கை இந்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்து முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், 50 சதவீத பணியாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் கனியார் நிறுவனங்கள் மற்றும் 75 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்து சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் பஸ்கள் தேவைப்படுவோர் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 9445014402, 9445014416, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய செல்போன் எண்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

கண்ணன்Aug 12, 2020 - 12:56:10 PM | Posted IP 162.1*****

திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ள போது பஸ் எப்படி தேவைப்படும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory