» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கருப்பர் கூட்டம் போல் செயல்படும் துரைமுருகன்: தூத்துக்குடி காவல் நிலையத்தில் பாஜக புகார்

புதன் 12, ஆகஸ்ட் 2020 8:44:50 AM (IST)கருப்பர் கூட்டம் போல் செயல்படும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகி  புகார் அளித்துள்ளார். 

தமிழகத்தில் சமீபமாக இந்துக்களை குறி வைத்து சில அமைப்புகள் இழிவு படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்து அமைப்புகள் ஓட்டுமொத்தமாக கருப்பர்கள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் கண்டன அறிக்கை போராட்டம் காவல் நிலையத்தில் புகார், என பல வகையில் இந்த பிரச்சனை எடுத்து செல்லப்படுகிறது. இந்திய பிரதமராக மோடி 2வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வலிமையான பாரதத்தை உருவாக்க பணியாற்றி வருகிறார். அவருக்கு ஆதரவாக பல மாநில முதல்வர்களும் உலக நாடுகளும் செயல்படுகின்றன. 

இந்நிலையில் தூத்துக்குடியில் பாரதீய ஜனதா கட்சியும் கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் ராஜேஷ்கனி வடபாகம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் "யூ டிபில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் சாத்தை என்ற பெயரில் சேனல் நடத்தி வருவதாகவும் அவர் இந்துக்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்று புகார் அளித்துள்ளார். சப்இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் மனு ரசீது வழங்கி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

NithiAug 13, 2020 - 09:29:04 PM | Posted IP 162.1*****

Soon it will not be a democracy country

realityAug 12, 2020 - 10:59:30 AM | Posted IP 162.1*****

please tell why and how Sattai Murugan statements are wrong. these people are trying to kill democracy. they have no brain, just a bunch of idiots

truthAug 12, 2020 - 10:54:07 AM | Posted IP 173.2*****

religious extremist/terrorists. not good for the country/democracy.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory