» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 6பேர் பலி: புதிதாக 251 பேருக்கு தொற்று உறுதி

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 8:43:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 6பேர் உயிரிழந்தனர். இன்று புதிதாக 251 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து காய்ச்சல் சிறப்பு முகாம்கள் மற்றும் சளி மாதிரிகள் சேகரிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதனால் பலர் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதே போன்று கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இன்று மாவட்டத்தில் 6பேர் கரோனாவல் உயிரிழந்துள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, ஆத்தூரை சேர்ந்த 47 வயது பெண் ஆகியோரும் இறந்து உள்ளனர். மேலும், நெல்லை, மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் இறந்து உள்ளனர். இதுதவிர சாயல்குடியை சேர்ந்த 42 வயது உடைய ஒருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இறந்து உள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 75-ஆக அதிகரித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 9 ஆயிரத்து 159 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 263 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று அறிகுறிகளுடன் 1821பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes



Thoothukudi Business Directory