» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு : மனைவி, குழந்தையை காணமுடியாமல் தவித்த கணவர்!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 7:56:47 PM (IST)கேரள நிலச்சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தேயிலைத் தோட்டம் உள்ளது. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அதே பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் பணி முடிந்து இரவில் வீட்டில் குடும்பத்துடன் தொழிலாளர்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலைத் தோட்டம் முழுவதும் சரிந்து தொழிலாளர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் மீது விழுந்தது. இதில், வீடுகளில் இருந்த 85 பேர் மண்ணில் புதைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இறந்தவர்களில் 9.8.2020 தேதி வரை 45 - உடல் புதைமண்ணில் இருந்து எடுத்துள்ளதாகவும், கேரளாவில் இருந்து தகவல் அனிஸ் பாபு பதிவிட்டுள்ளார்.  

இறந்த 83 - நபர்களில் தூத்துகுடி மாவட்டம் நானல் காட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணனின் மனைவி காயத்திரி (21), காயத்திரியின் 6மாத குழந்தை யுவனேஸ்வரன், அம்மா ராணி (46),  அப்பா காந்தி ராஜ் (54), தங்கை கார்த்திகா (19), கஸ்தூரி (17), பாட்டி செல்லம்மாள் (71) , ஆகிய ஏழு நபர்களும் மண்ணில் புதைந்து இறந்து விட்டார்கள்,  மாயகிருஷ்ணன் கடந்த இரண்டு நாட்களாக இறந்த மனைவி, குழந்தை, மாமியார் , மற்றவர்களை பார்க்க வழி தெரியாமல் தவித்து வந்துள்ளார். இதையடுத்து அகில இந்திய அனைத்து வியபாரிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மூலம்  மாநில துணை அமைப்பாளர் முகமது முஸ்தபா, அனைத்திந்திய மக்கள் உரிமைக் கழகத்தின்பொதுச் செயலாளர் எழுத்தாளர் வீரமலை ஆகியோர் உதவியால், கிராம நிர்வாக அலுவலரிடம் கடிதம், இபாஸ் பெற்றுக் கொடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory