» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டாய கரோனா சோதனை : மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 2:04:13 PM (IST)தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மாநகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்குத்தெரு பகுதியில் மாநகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சுகாதார ஒப்பந்த பணியாளர்கள் கரோனா பரிசோதனைக்காக மக்களை வலுக்கட்டாயமாக முகாமிற்கு அழைத்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி வாகனத்தில் வந்த ஒப்பந்த பணியாளர் ஒருவர் பொதுமக்களை அவதூறாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை சூழ்ந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்தினர். 

அதற்கு அந்த நபர் நான் எதற்கும் தலைவணங்காதவன், நான் ஒன்றும் மன்னிப்பு கேட்க முடியாது எனகூறி மாநகராட்சி வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கரோனா தடுப்புப் பணிக்காக வந்த மற்றொரு வாகனத்தை சிறைபிடித்தனர். இதுகுறித்த தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory