» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் No Work No Pay - பதிவாளர் எச்சரிக்கை!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 1:39:29 PM (IST)

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் கூட்டுறவு சங்க கடைகள் இந்த பணியை செய்கின்றன.பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்ததில் ஈடுபடும் ஊழியர்களுக்கு No Work  No Pay என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரித்துள்ளார். நாளை முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes








Thoothukudi Business Directory