» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 146 மதுபாட்டீல்கள் பறிமுதல்! 4 பேர் கைது!!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 11:58:32 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை பயன்படுத்தி மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை பயன்படுத்தி மதுபான பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் படியும், டிஎஸ்.பி கணேஷ் ஆலோசனையின் படியும், தூத்துக்குடி வடபாகம் மற்றும் தாளமுத்துநகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில் தாளமுத்துநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மதுபானம் விற்றுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடமிருந்து 68 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுபற்றி விசாரணை நடத்தியதில் சிலுவைப்பட்டி கணபதி நகர் சுனாமி காலனியைச் சேர்ந்த கந்தவேல் மகன் மாரியப்பன் (வயது 41), துப்பாஸ்பெட்டி கீழ அரசரடியைச் சேர்ந்த சோலை மகன் கணபதி (வயது 56) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல் வடபாகம் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வட்டக்கோவில் அருகே திருட்டுத்தனமாக மதுபானம் விற்றுக் கொண்டிருந்த 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 78 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் ப்ருத்திவிராஜ் (வயது 22), ஆரோக்கியபுரம் 4வது தெருவைச் சேர்ந்த கணேஷன் மகன் பார்த்தீசன் (வயது 47) ஆகிய இருவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory