» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறை உதவி :தூத்துக்குடி எஸ்பி. ஜெயக்குமார்!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 11:41:33 AM (IST)



நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறை சார்பில் உதவி செய்யப்படும் என மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கின் போது வெளியே சுற்றியவர்களை தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் பகுதியில் போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர்.

ஆய்வுக்காக அங்கு வந்த மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களிடம் கரோனா பரவாமல் தடுக்க ஞாயிறு அன்று  தளர்வில்லாத  முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இவ்வாறு நீங்கள் வெளியே சுற்றினால் நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. பிற நாட்களில் நீங்கள் எப்படி இருந்தாலும், ஞாயிறு அன்று வெளியே வராமல் வீட்டிலிருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.  அந்த வகையில் இதுவரை சுமார் 7782க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3484 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில், கடந்த  வாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இது கடந்த ஒரு வார காலத்தில் பிடிக்கப்பட்டதாகவும், தூத்துக்குடி நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிற‌து. இந்த பணிகள் முடிவடைந்த பின்பு சாலை போக்குவரத்து சீர் செய்யப்படும். அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் சம்பவம்போல் தொடராமல் இருப்பதற்காக உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு பயிற்சி மற்றும் தியானம், மனவளர்ச்சி புத்துணர்வு போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் கேரள நிலச்சரிவால் உயிரிழந்த கயத்தாறைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறை சார்பாக உரிய உதவிகள் செய்யப்படும். இவ்வாறு எஸ்பி., ஜெயக்குமார் தெரிவித்தார்.  

ஆய்வின் போது தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி., கணேஷ், காவல் ஆய்வாளர்கள் ஜெயப்பிரகாஷ், அம்பிகா, வனிதா, போக்குவரத்து  ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், உதவி ஆய்வாளர்கள் சங்கர், செந்தில்குமார், பி.ஆர்.ஓ. சத்தியநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications





Black Forest Cakes




Thoothukudi Business Directory