» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் கைதான சப் இன்ஸ்பெக்டருக்கு மூச்சுத் திணறல் : அரசு மருத்துவமனையில் அனுமதி!

சனி 8, ஆகஸ்ட் 2020 8:22:19 PM (IST)

சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் கொலை வழக்கில் கைதான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பால்துரை மூச்சுத் திணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பால்துரை. இவர் சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா பாதிப்பிற்குள்ளாகி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்துரைக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Anbu Communications






Thoothukudi Business Directory