» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுக்கட்சியினர் 100பேர் அமமுகவில் இணைந்தனர்

சனி 8, ஆகஸ்ட் 2020 8:44:06 AM (IST)



கயத்தார் ஊராட்சி, கன்னக்கட்டை பகுதியில் மாற்றுக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஊராட்சி ஒன்றியம், கன்னக்கட்டை ஊராட்சி மன்ற தலைவர் கே. சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தேர்தல் பிரிவுச் செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். 

இந்நிகழ்வில் கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளரும் கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான மகேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர், உடையார் பாண்டி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர், மகாராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு பொருளாளர், பொன் ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொது குழு உறுப்பினர், கணேஷ் பாண்டியன், பொன் மாடசாமி, கழக நிர்வாகிகள் துரை, குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory