» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 10:09:02 PM (IST)



தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் அவர்கள் தலைமையில் கலைஞரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கரோனா களப் பணியாளர்கள் சுமார் 100 பேருக்கு கையுறை, முக கவசம், சோப் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 

இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், தொண்டரணி ரமேஷ், பொறியாளர் அணி அன்பழகன், மகளிரணி கஸ்தூரி தங்கம், மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன் மாவட்ட பிரதிநிதி கதிரேசன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் அருண் சுந்தர், ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes








Thoothukudi Business Directory