» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் கருணாநிதி நினைவு நாள் : மாணவ, மாணவியருக்கு எம்.எல்.ஏ., பரிசு!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 7:50:10 PM (IST)திருச்செந்தூரில் கருணாநிதி நினைவு நாளையொட்டி பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., பரிசுகள் வழங்கினார்.

திருச்செந்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி அவரது உருவ படத்திற்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் திருச்செந்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, காயாமொழி, தேரிக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் 13 பேர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்க பரிசும், பதக்கமும், இரண்டாமிடம் பெற்ற 14 மாணவ மாணவியர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ரொக்க பரிசும், பதக்கமும் வழங்கினார்.
  
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஜெபராஜ், ராஜபாண்டி, ஸ்ரீதர் ரொட்ரிகோ, சாமுவேல்ராஜ், ராஜமோகன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் லதா கலைச்செல்வன், இசக்கிமுத்து, சுதாகர், கிருபாகரன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணல்மேடு சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  
மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory